ரஜினி ரீல் லைஃப்ல தான் அண்ணாமலை, நான் ரியல் லைஃப்ல அண்ணாமலை
ரஜினிகாந்த் ரீல் லைஃப் அண்ணாமலை என்றால் தான் ரியல் லைஃப் அண்ணாமலை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சிவகங்கையில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வந்ததே முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தான் என்று குறிப்பிட்டார் .
சிதம்பரத்தை போன்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தான் படிக்கவில்லை என்று கூறிய ஹெச் ராஜா அண்ணாமலை ரஜினி போல வீடுகளுக்கு பாலூற்றி படித்தவன் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




