சென்னையில் போராட்டங்கள் நடத்த மார்ச்.14 வரை தடை விதிப்பு
சென்னையில் போராட்டங்கள், மனித சங்கிலி உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்த அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை காவல் துறை தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், போக்குவரத்து பகுதிகள், சாலை, தெருக்களில் கூட்டம் கூடவும், பேரணி, உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனிதசங்கிலி நடத்தவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28-ஆம் தேதி காலை 9 மணி முதல் மார்ச் 14-ஆம் தேதி காலை 9 மணி வரை 14 நாட்களுக்கு இந்த தடை விதித்து ஆணையிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் விருப்ப எண்ணம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஐந்து நாட்களுக்கு முன்பாக அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




