--- --:--:-- --

சொத்து விவகாரம்: பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஸ்ட்ரெட்சரில் அழைத்துவரப்பட்ட நபர்

9

கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட வரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிவந்து பத்திரப்பதிவு செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு ராஜாராம் என்பவர் ஆம்புலன்சில் வைத்து அழைத்து வரப்பட்டார்.

 

ஆம்புலன்சில் இருந்து ஸ்ட்ரக்சர் மூலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தூக்கி சென்று பத்திர பதிவு அலுவலர் செல்வ பாலமுருகன் முன்பு வைத்தனர். உரிய மருத்துவ சான்றிதழ்களும் காண்பிக்கப்பட்டன. பத்திர பதிவு அலுவலர் செல்வ பால முருகன் ராஜாராமன் தற்போது உள்ள சூழ்நிலையில் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

பின்னர் மஞ்சுளா அவர் சுய நினைவில் உள்ளார். இதற்கான மருத்துவ சான்றிதழ் இருக்கிறது என்று சொல்லியும், பத்திரப்பதிவு செய்து தர முடியாது என்று வெளியே அனுப்பினார். இதனை தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் ராஜாராமனை ஸ்ட்ரெச்சரில் வைத்து சார் பதிவாளர் அலுவலகம் முன்பு மஞ்சுளா மற்றும் அவரது குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு கை, கால், வாய் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு, படுத்தப் படுக்கையாக உள்ள ராஜாராமின் வீட்டுமனையை தனது பெயருக்கு மாற்றி அதை விற்று மகனின் படிப்பு செலவுக்கு பயன்படுத்துவதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு கணவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்து வந்ததாக மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon