மகளின் இறப்புக்கு நீதிக்கேட்ட தந்தையை எட்டி உதைத்த காவலர்

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் கல்லூரி விடுதியில் உயிரிழந்த மாணவிக்கு நீதி வழங்கக் கோரி போராட்டம் நடத்திய தந்தையை காலால் எட்டி உதைத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

வெளிமேலாவில் தனியார் கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் இறப்புக்கு நீதி கோரி போராட்டம் நடத்திய அவரது தந்தையை ஸ்ரீதர் என்ற காவலர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

 

ஈவு இரக்கமின்றி காவலர் நடந்து கொண்டதாக கண்டனம் எழுந்ததை அடுத்து அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இருந்தபோதும் எதிர்ப்பு வலுத்ததால் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.


Leave a Reply