--- --:--:-- --

சென்னை மெட்ரோ ரயில்களில் திரைப்படங்களை பார்க்கும் வசதி அறிமுகம்

7

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போர் திரைப்படம் உள்ளிட்ட கேளிக்கை காணொளிகளை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உருவாக்கியுள்ள சுதுர் பாக்ஸ் என்ற செயலி மூலமாக காணொளிகளை காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மெட்ரோ ரயிலில் உள்ள வசதியை கொண்டு சுதுர் பாக்ஸ் செயலியில் பதிவிடப்பட்ட காணொளிகளை ரசிக்க முடியும் என மற்றொரு நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள காணொளிகள் சுதுர் பாக்ஸ் பதிவிடப்பட்டுள்ளன.

 

இந்த காணொளிகளை தரவிறக்கம் செய்யும் வசதியும் அந்த பாக்ஸில் செயலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுதுர் பாக்ஸ் செயலி ஆன்டிராய்டு, ஐஓஎஸ் இயங்கு தளங்களில் செயல்படும் வசதியும் கொண்டுள்ளது.

 

சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் சுதுர் பாக்ஸ் செயலியை பயன்படுத்தலாம் என்றும், விரைவில் இந்த சட்டம் அனைத்து விதமான வழித்தடங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon