இஸ்லாமியர் திருமண அழைப்பிதழில் இந்துக் கடவுள் படங்கள்!

உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் இஸ்லாமியர் ஒருவர் தமது மகளின் திருமண அழைப்பிதழில் ஹிந்து கடவுள்களின் படங்களை அச்சிட்டு மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

மீரட் ஹஸ்தினாபூர் பகுதியை சேர்ந்த முகமது என்பவர் நான்காம் தேதி நடக்கும் தனது மகள் அஸ்மாவின் திருமண அழைப்பிதழில் கணபதி மற்றும் ராதை கிருஷ்ணரின் படங்களை அச்சிட்டு உள்ளார்.

 

மதத் துவேஷம் சமூகத்தை வேட்டையாடும் வேலையில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வெளிகாட்ட இந்த முயற்சி உதவும் என்பது அவரது நம்பிக்கை. இந்த திருமண அழைப்பிதழுக்கு தனது நண்பர்கள் வட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply