சி.ஏ.ஏ சட்டத்தை ஆதரித்து ” மாஸ் காட்டிய பா.ஜ.க பேரணி !!!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தலைநகரான டெல்லியில் உள்ள ஹாசராபாத் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் இந்த சட்டத்தை ஆதரித்து இந்தியா முழுவதும் பா.ஜ.க-வினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதனையடுத்து குடியுரிமை சட்டத்தை ஆதரித்து தமிழக பா.ஜ.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் இன்று பேரணி நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன் ஒருபகுதியாக கோவையில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

பேரணி செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.பேரணியாக வந்த பா.ஜ.க-வினர் இறுதியாக மாவட்ட ஆட்சியரகத்தில் முடிவு பெற்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,பேரணி துவங்கும் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒரு பிரிவான ஆர்.ஏ.எப் எனப்படும் கலவர தடுப்பு படை பிரிவு போலீசாரும், கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம் போன்றவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply