மருத்துவர்கள் இல்லாமல் ஊழியர்களே உடற்கூறாய்வு?

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் ஊழியர்களே பிரேத பரிசோதனை செய்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தர்மபுரி சுற்றுவட்டாரங்களில் நிகழும் விபத்துக்களில் இறந்தவர்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த நிலையில், பிப்ரவரி 20ஆம் தேதி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் செல்போன் வீடியோ ஒன்றில் சடலம் ஒன்றை மருத்துவர்கள் இல்லாமல் ஊழியர்களை பிரேத பரிசோதனை செய்வது போன்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த காட்சி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மருத்துவமனை முதல்வர் சீனிவாச ராஜு தெரிவித்துள்ளார்.


Leave a Reply