--- --:--:-- --

காதல் திருமணம் செய்த காதலர்கள் சில நொடியிலே விபத்தில் இறப்பு..சதியா? விதியா?

10

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதல் திருமணத்தை முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த புதுமண தம்பதி மீது லாரி மோதியதில் மணமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புது பாளையத்தை சேர்ந்த ஐயன்துறை என்பவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

 

உடன் பணிபுரிந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்ற பெண்ணை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் இளம்பிள்ளை அருகே உள்ள சித்தர் கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடித்த கையோடு இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

 

சங்ககிரி அருகே எதிரே வந்த லாரி மோதியதில் ஐயன் துறை மனைவி கண் முன்னே உயிரிழந்தார். காயமடைந்த ஸ்ரீதேவி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon