--- --:--:-- --

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு? முற்றுப்புள்ளி வைத்த ஜிவி!

11

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாருக்கும், அவரது மனைவி பாடகி சயந்தவிக்கும் இடையே கருத்து வேறுபாடு எனவும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தொடர்ந்து வெளியாகி வந்த தகவல்களுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

 

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிக்க வந்ததற்கு பிறகு அவரது மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளனர் என்றும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. அவர்கள் இருவரையும் ஏ ஆர் ரகுமானின் குடும்பத்தினர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கணவருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சைந்தவி தனது ஆகச்சிறந்த பாதி ஜிவி பிரகாஷ் என்றும் பதிவிட்டுள்ளார். அதே புகைப்படத்தை ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon