இந்தியாவில் பயணம் மேற்கொண்ட ட்ரம்புக்கு நன்றி தெரிவித்து மோடி ட்வீட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும், ட்ரம்பின் பயணம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த சுற்றுப்பயணத்தில் இருவரும் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தையும் விருந்தோம்பலையும் கண்டு மகிழ்ந்திப்பார்கள் என தான் நம்புவதாகவும் பிரதமர் மோடி அதில் கூறியுள்ளார்.மற்றொரு ட்வீட்டில் ட்ரம்பின் மகள் இவாங்கா மற்றும் அவரது கணவர் இதுகுறித்து குறிப்பிட்டு விரைவில் இருவரும் மீண்டும் இந்தியாவிற்கு வருவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply