--- --:--:-- --

பெண்களிடம் ஆபாச பேச்சு! வங்கி மேலாளர் தாக்கப்பட்ட சம்பவம்!

2

கோவை சிங்காநல்லூரில் ஆந்திரா வங்கி மேலாளர் இளங்கோவனை சிலர் சாலையில் இழுத்து வந்து தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வங்கிக்கு நேற்று மதியம் பாரத இந்து பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறி சிலர் வந்துள்ளனர்.

 

தங்களது அமைப்பு நிர்வாகியின் மனைவியிடம் வங்கி மேலாளர் இளங்கோவன் தவறாக பேசியதாக கூறி அவரை வெளியே இழுத்து வந்தனர். அங்கு அவர் பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கப்பட்டு பின்னர் ஆடை கிழிந்த நிலையில் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மேலும் பெண் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வங்கி மேலாளரிடம் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon