ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன், பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவியை நட்பாக பேசி தனியே அழைத்து சென்றுள்ளார்.

 

அங்கு வந்த அந்த மாணவரை நண்பர்கள் இருவரும் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து 3 பேராக சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மயக்கம் மருந்து தெளிந்து மாணவி பெற்றோர் மூலம் அளித்த புகாரின் பெயரில் பதினோராம் வகுப்பு மாணவனை கைது செய்த போலீசார் அவரது நண்பர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.


Leave a Reply