(நெகிழி)பிளாஸ்டிக் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி! நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு !!!

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் துரித உணவை உண்ணாதே, பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பாதுகாப்பான உணவே ஆரோக்கியமான வாழ்வு,உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவீர்,பெண்கள் நம் நாட்டின் கண்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி பந்தய சாலையில் உள்ள சுகாதாரத்துறையின் துணை இயக்குனர் அலுவலகத்தில் நிறைவுற்றது.இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.


Leave a Reply