அப்துல்கலாம் முகம் வடிவில் நின்ற 700 மாணவர்கள்

கடலூரில் 700 மாணவர்களை கொண்டு அப்துல் கலாம் உருவம் வரைந்து காண்பிக்கப்பட்டது. கடலூரை சேர்ந்த தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர்களிடம் அப்துல்கலாமின் சிந்தனைகளை எடுத்துச் செல்லும் வகையிலும் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும் மரபும் மாற்றமும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் முகத்தை உருவமாக வரைந்து கைகளில் தேசியக்கொடி வண்ணம் தோன்றும் வகையில் பலூன்களை பிடித்தவாறு நின்றனர். இந்த காட்சி காண்போரின் கண்களை குளிர வைத்துள்ளது.


Leave a Reply