--- --:--:-- --

பெங்களூரில் பரபரப்பாக விற்கப்படும் ஐஸ்கிரீம் தோசை

18

பெங்களூரில் சாலையோர உணவகத்தில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் தோசைக்கு முழு மதிப்பெண்கள் அளிப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் பெங்களூருவில் பரபரப்பாக விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் தோசை குறித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

 

இந்த தோசைக்கு தான் ரசிகர் அல்லாத போதும் அவரை உருவாக்கியவரின் புதுமையான சிந்தனை முழு மதிப்பெண்கள் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மகேந்திரா உண்மையில் இந்தியாவின் சாலையோர வியாபாரிகள் புதுமைகளின் வற்றாத ஆதாரம் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

மேலும் தங்கள் குடும்பத்தின் அனைத்து வடிவமைப்பு குழுவினரையும் அவ்வப்போது இந்த வியாபாரிகளை பார்த்து உத்வேகம் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon