கழிவறையில் விழுந்த கார் சாவி! எடுக்க முயன்றவரின் கை சிக்கி கொண்ட பரிதாபம்!

மதுரையில் கழிவறையில் உள்ள குழாயில் விழுந்த சாவியை எடுக்க முயன்றவரின் கை குழாயில் சிக்கிக் கொண்டது. சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நபரின் கையை வெளியில் எடுத்து வந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டனர்.

 

மதுரை புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்ற நபரின் கார் சாவி அங்கிருந்த குழாயில் தவறி விழுந்தது .அப்போது சாவியை எடுக்க முயன்றபோது அவரது கை குழாயில் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராடி அந்த நபரின் கையை வெளியே எடுத்தனர்.


Leave a Reply