திரைப்படம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஆன்லைன் மூலம் அளிப்பதில் முன்னிலையில் உள்ள நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுக வாடிக்கையாளர்களின் தேர்வு செய்யப்படுவோருக்கு மட்டும் முதல் மாதத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும் என அறிவித்துள்ளது.
இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 199 ரூபாய் கட்டணத்திலும், கணினி மற்றும் டிவி வாடிக்கையாளர்களுக்கு மாதத்தில் 499 ரூபாய், 649 ரூபாய், 799 ரூபாய் என மூன்று விதங்களிலும் நெட்பிளிக்ஸ் சேவை வழங்குகிறது.
முதலில் முதல் மாதம் மட்டும் கட்டணம் இல்லாமல் இலவசமாக இச்சேவையை அந்த நிறுவனம் வழங்கியது. பிறகு கடந்த டிசம்பர் மாதம் அந்த சேவையை நீக்கிய நெட்பிளிக்ஸ் தற்போது ஐந்து ரூபாய் கட்டணத்தில் முதல் மாத அறிமுக சேவை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.