வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்த சில்பா ஷெட்டி
ஹிந்தி நடிகை சில்பா செட்டி வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை ஷில்பா ஷெட்டி கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 2012ஆம் ஆண்டில் அவர்களுக்கு மகன் பிறந்தார்.
அவனுக்கு எட்டு வயதாகும் நிலையில் தற்போது வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கடந்த 15ஆம் தேதி குழந்தை பிறந்த போதிலும் புனித நாளான சிவராத்திரியை தேர்வு செய்து குழந்தை பிறந்த தகவலையும் அக்குழந்தைக்கு சமீஷா ஷெட்டி குந்த்ரா என பெயரிட்ட தகவலையும் இன்ஸ்டாகிராமில் ராஜ்குந்த்ரா வெளியிட்டுள்ளார்.

அதில் குந்தராவின் கைவிரலை குழந்தை தனது கைகளால் பிடித்து இருப்பது போன்ற காட்சி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




