--- --:--:-- --

22 மொழிகளில் பேசிய வெங்கய்ய நாயுடு

5

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 22 மொழிகளில் பேசி அசத்தியுள்ளார். உலக தாய்மொழி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமது பன்மொழி திறனை வெளிக்காட்டிய வெங்கையாநாயுடு அனைத்து இந்தியர்களும் தத்தம் தாய் மொழியை வளர்ப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வதுடன் பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

இந்திய மொழிகளை வளர்க்க தேசிய அளவிலான இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்ற அவர் தாய் மொழியை பாதுகாத்து வளர்ப்பதன் மூலம் நமது பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தையும் வளர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்பதை சட்டமாக்கலாம் என்பதும் அவரது எண்ணமாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon