--- --:--:-- --

பெண்கள் முன்பக்கம் ஏற தடை! இனிமேலாவது பஸ் நார்மலா போகுதானு பாப்போம்!

12

பேருந்துகளில் ஓட்டுனருக்கு அருகில் உள்ள இருக்கையில் பெண் பயணி அமர்ந்தால் ஓட்டுநர் செய்யும் குட்டி சேட்டைகள் எப்படி இருக்கும் என்பதை சினிமாவில் நகைச்சுவையாக சொல்லப்பட்டதை தினமும் கோவை பேருந்து ஓட்டுநர்கள் அரங்கேற்றி வருவதாக பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுகின்றன. கோவை மாநகரை பொறுத்தவரை அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

 

அரசு பேருந்துகளில் ஓட்டுநரும், ஒரு நடத்துனரும் மட்டும் இருப்பர். ஆனால் தனியார் பேருந்துகளில் ஓட்டுநர், ஓமுன் படிக்கட்டில் ஒரு நடத்துனரும், பின் படிக்கட்டில் ஒரு நடத்துனரும், மேலும் ஒரு உதவியாளர் என மூன்று பேர் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆகவே இருப்பார்கள்.

 

இவர்கள் ஒவ்வொருவரும் செய்யும் அலப்பறைகள் சொல்லிமாலாது. சென்னையில் பேருந்தின் இடது பக்கத்திலும், கடைசிவரிசையிலும் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருப்பதைப்போல கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் முன்பக்கம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக தனியார் பேருந்தில் ஓட்டுநரின் இருக்கையின் பக்கவாட்டிலும், பின்புறத்திலும் பெண் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது மாநகரப் பேருந்தில் மட்டுமின்றி புறநகர் பேருந்திலும் இதே நிலைதான்.

 

பெண்கள் பக்கவாட்டிலும், பின்புறத்திலும் அமர்வதால் ஓட்டுநர்கள் தங்களை ஒரு கதாநாயகனாக கருதிக்கொண்டு கூலிங் க்ளாஸ் அணிந்து கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும் சத்தம் அதிகமான ஹாரன்களை அடித்துக்கொண்டு பேருந்துகளை இயக்குவதால் சாலை விபத்துக்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

கோவையைப் பொருத்தவரை பெரும்பாலும் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளால் தான் அதிகளவில் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பேருந்துகளை பயன்படுத்தும் காலை மற்றும் மாலை நேரங்களில் தான் இதுபோன்ற அட்டகாசங்கள் நடப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர் போக்குவரத்து புலனாய்வு போலீசார்.

 

அதுமட்டுமல்லாமல் பெண்களையும், கல்லூரி மாணவிகளையும் கவருவதற்காக பேருந்துகளில் சினிமா குத்து பாடல்களையும், இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களையும் அதிக சத்தத்தில் ஒலிக்கவிட்டு கொண்டு செல்வதால் வயதானவர்கள் முகம் சுளித்துக் கொண்டே பயணம் செய்து வருகின்றனர்.

 

எனவே கோவையில் போக்குவரத்து விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்து பேருந்துகளில் முன் பக்கம் ஆண்கள் அமரக்கூடிய வகையில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்படி கொண்டு வந்தால்தான் விபத்துக்கள் குறையும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

 

இதையடுத்து அரசு போக்குவரத்து கழக கோவை மண்டலம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் பேருந்தின் முன்பக்கம் பெண் பயணிகளை அமர வைப்பதை தவிர்க்கவும், கூட்ட நெரிசலில் ஓட்டுனர் இருக்கை அருகே பெண் பயணிகள் அமரும் நிலை ஏற்பட்டால் அவர்களுடன் ஓட்டுனர் பேசக்கூடாது என்றும் அதிரடி உத்தரவை ஓட்டுநர்களுக்கு வைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon