--- --:--:-- --

ஜப்பான் கப்பலில் சிக்கியுள்ள தமிழர், தங்களை மீட்குமாறு அரசுக்கு வேண்டுகோள்

5

கப்பலில் இருக்கும் இந்தியர்களை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஜப்பானில் நடுக்கடலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் சொகுசு கப்பலில் இருந்து தமிழர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 3000 பேருடன் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்திற்கு டைமன் ப்ரின்சஸ் என்ற சொகுசு கப்பல் ஒன்று சென்றது.

 

வைரஸ் அச்சுறுத்தலால் அந்த கப்பல் நடுக்கடலில் தனிமைப்படுத்தப்பட்டது. அதிலிருக்கும் 350க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த கப்பல் ஊழியர் அன்பு என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் கப்பலில் உள்ள பயணிகள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களை மருத்துவ கண்காணிப்பில் வைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுவரை தமக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அவர் இனியும் பாதிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon