--- --:--:-- --

சென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம்…! உலமாக்கள் ஓய்வூதியம் இரு மடங்காக அதிகரிப்பு ..! இஸ்லாமியர்களுக்கு சலுகைகளை அறிவித்த முதல்வர்!!

k

சிஏஏக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தும் நிலையில், ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் ரூ 15 கோடியில் ஹஜ் இல்லம், உலமாக்களின் ஓய்வூதியம் இரட்டிப்பாக்கும் என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

தமிழக சட்டப்பேரவைக்கு வெளியே , இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர் முற்றுகை போராட்டத்திற்காக திரண்டு பேரணி நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

 

இந்தப் பரபரப்பான சூழலில், சட்டசபைக்கு உள்ளே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு சலுகைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லீம்கள் தங்க வசதியாக சென்னையில் ரூ.15 கோடி மதிப்பில் ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

 

மேலும் உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.1500-ல் இருந்து இரு மடங்காக உயர்த்தி ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் உலகமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மான்யம் வழங்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon