--- --:--:-- --

ஜனாதிபதியுடன் திமுக கூட்டணி எம்.பி.க்கள் சந்திப்பு..! சிஏஏ-க்கு எதிரான 2 கோடி பேரின் கையெழுத்தை வழங்கினர்!!

ttghd

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி இரண்டு கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களை திமுக கூட்டணி கட்சி எம்.பி.,கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் சந்தித்து வழங்கினர் .

 

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு கட்டமாக சிஏஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் ஒரு வாரம் நடத்தப்பட்டது.

 

இதில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். இந்நிலையில் இரண்டு கோடி பேரின் கையெழுத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் திமுக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று நேரில் சந்தித்து வழங்கினர்.

 

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர் .பாலு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மற்றும் திருச்சி சிவா மாணிக்கம்தாகூர் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon