நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே தன்னை துரத்திய யானைக்கு எதிரே துணிச்சலாக நின்று லாவகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணி தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன. உதகையிலிருந்து முதுமலை வழியாக மைசூர் செல்லும் சாலையில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
தெப்பக்காடு அருகே சாலையோர மறைவிலிருந்து திடீரென வெளிபட்ட யானை ஒன்று அந்தப் பெண்ணை துரத்தத் தொடங்கியது. சைக்கிளில் இருந்து இறங்கி தள்ளிக்கொண்டே சிறிது தூரம் ஓடிய அந்த பெண் பின் சுதாரித்துக்கொண்டு ஓடாமல் என்றார். அவர் நின்றதைப் பார்த்து யானையும் நிற்க்கவே மெல்ல சைக்கிளை பின்னோக்கி தள்ளிக்கொண்டே தப்பினார்.
யானையும் அங்கிருந்து விலகி சென்றது. சுற்றுலா பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட அந்த செல்போன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.