பாறையின் உச்சத்தில் எடுத்த புகைப்படத்திற்கு கண்டனம்!

பிரேசிலில் மிக உயரமான பாறை மீது அமர்ந்து ஆபத்தான நிலையில் புகைப்படம் எடுத்த பெண்ணுக்கு சமூகவலைதளத்தில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ரியோடி ஜெனிரோவில் டெட்ராடா கேவி என்ற பிரம்மாண்ட பாறை உள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட பாறையின் உச்சத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக அமர்ந்து புகைப்படம் எடுத்தார்.

 

அப்போது அந்த பெண்ணின் ஆண் நண்பர் வேண்டுகோளுக்கிணங்க சிறிது தூரம் தள்ளி சென்றார். ஆபத்தின் உச்சத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை அந்த பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து வந்த பதிவுகளில் அவருக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர்.


Leave a Reply