செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர்

சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் கலாம்பக்கத்தில் வைத்து ஒரு கையால் பேருந்தை ஓட்டி அப்படியே செல்போனில் பேச தொடங்கியுள்ளார்.

 

பெருங்களத்தூர் கடந்து போரூர் சுங்கச்சாவடி வரை அவர் செல்போனில் பேசியபடியே பேருந்து இயக்கிய தாக கூறப்படுகிறது. பயணி ஒருவர் எடுத்த இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பயணிகளை குறித்து கவலை கொள்ளாமல் விதிகளை மீறி செயல்பட்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Leave a Reply