5 கால் மாட்டை வைத்து சம்பாதிக்கும் இளைஞர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 5 கால்களைக் கொண்ட பசுமாட்டை தினமும் ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று இளைஞர் ஒருவர் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. சாதாரணமாக நான்கு கால்களைக் கொண்ட மாடுகளை மட்டுமே பார்த்தவர்களுக்கு இந்த ஐந்து கால்களைக் கொண்ட பசு அதிசயமாக தெரிவதால் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து பக்தர்கள் வணங்குகின்றனர்.
தினம் ஒரு கோவிலுக்கு அழைத்து வரப்படும் இந்த பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் போன்றவற்றை பக்தர்கள் வழங்குகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




