--- --:--:-- --

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமை ஆசிரியர் கைது

11

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மாகாளியப்பன்.

 

இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த 10ஆம் தேதி தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கோவை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

விசாரணை நடத்திய போலீசார் தலைமை ஆசிரியர் மாகாளியப்பனை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon