பேருந்துக்குள் நடனமாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஓட்டுநர்
மும்பையில் பேருந்துக்குள் நடனமாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவி மும்பை மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் யோகிதா என்பவர் டிக் டோக் வீடியோவில் பேருந்துக்குள் சீருடையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
பணி நேரத்தில் டிக் டாக் வீடியோவில் நடனமாடி இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதேசமயம் இந்த வீடியோவை தான் எடுக்கவில்லை என்றும் இடைவெளி நேரத்தில் அங்குள்ள பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தான் தன்னை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என்றும் அந்தப் பெண் ஓட்டுநர் விளக்கம் அளித்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




