--- --:--:-- --

கால்நடை ஆராய்ச்சி பூங்கா கட்டுமான பணி விரைந்து முடிக்கப்படும்..! அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!!

88

சேலம் மாவட்டம் தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவின் கட்டுமான பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும் என கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 9-ந் தேதி அடிக்கல் நாட்டினார். இதை முன்னிட்டு தலைவாசலில் மூன்று நாட்கள் வேளாண் கண்காட்சி நடந்தது.

 

இந்தக் கண்காட்சியை 3 முதல் 5 லட்சம் பேர் கண்டு கழித்துள்ளனர் என்றும்,கால்நடை ஆராய்ச்சி பூங்காவின் கட்டுமானப்பணிகள் தரமாகவும் மிக விரைவிலும் கட்டி முடிக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon