டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மீ, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. இதில் 62.59 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 21 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கையை துல்லியமாகவும், விரைவாகவும் வழங்க பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அனைத்து ஊடகங்களும் கூறியிருக்கும் நிலையில், இன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.