மகாராஷ்டிராவில் இளம் பேராசிரியரின் உயிரைப் பறித்த ஒருதலைக் காதல்

பொருந்தாத ஒருதலை காதலால் ஒரு இளம் ஆசிரியையின் எதிர்கால கனவுகள் தீயில் கருகி போன அக்கிரமம் நாக்பூரில் நடந்துள்ளது. கடந்த 3ஆம் தேதி மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் கிங்கத் பகுதியில் வழக்கம் போல கல்லூரியில் அன்றைய தினம் எடுக்க வேண்டிய பாடம் குறித்த சிந்தனையோடு சாலையில் நடந்து கொண்டிருந்தார் அங்கிதா என்ற 24 வயது இளம் பேராசிரியை.

 

அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த ஒருவர் திடீரென அங்கீதா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினார். 40 சதவீத தீக்காயங்களுடன் அங்கிதாவை பொதுமக்கள் மீட்டு நாக்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சங்கீதாவின் உயிர் நேற்று பிரிந்தது.

 

அங்கிதா உயிரிழந்ததால் அந்த பகுதி மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டது. வீதியில் இறங்கி மக்கள் போராடினர். குற்றவாளியை தூக்கில் இட வேண்டும் என முழக்கமிட்டனர். பள்ளி, கல்லூரிகள், கடைகள் மூடப்பட்டன. அரசியல் கட்சியினரும் களத்தில் இறங்கின. ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காவல்துறையினர் சமாதானம் பேசியும் கலைய மறுத்ததால் தடியடி நடத்தப்பட்டது.

 

படிக்கும் காலத்தில் இருந்து சங்கீதாவின் நண்பரான விக்கி என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிதாவிடம் காதலை சொல்ல அதை மறுத்திருக்கிறார் அங்கிதா. அதன்பிறகு திருமணமாகி ஒன்பது மாத ஆண் குழந்தையும் உள்ளது.

 

இருப்பினும் அங்கிதாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கண்ணை மறைத்த பொருந்தாக் காதல் இளம் பேராசிரியை ஒருவரின் கனவுகளை கருகச் செய்த கொடூரத்தில் முடிந்துள்ளது.


Leave a Reply