அவிநாசி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் அடுத்துள்ள அவிநாசி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கரோனா வைரஸ் குறித்த தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை மெஹருன்னிசா தலைமை தாங்கினார். ஆசிரியை ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெயலட்சுமி கரோனா வைரஸ் குறித்து விளக்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது : இந்த வைரஸானது விலங்கிலுருந்து பரவுகிறது. சைனாவில் இதுவரை 900 பேருக்கு மேல் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

 

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் வந்தால் என்ன பண்ணுவது. இதை தடுப்பது எப்படி என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் இருமும்போது அதன் மூலம் பரவுகிறது தும்மும்போது அதன் மூலம் பரவுகிறது. அதனால் நாம் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

பாதிப்பு இருப்பது தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்க்க வேண்டும். பொது இடங்களில் இருந்து வந்தால் உடனே நாம் கைகளை கழுவ வேண்டும் என்றார். தொடர்ந்து பகுதி சுகாதார செவிலியர் தேன்மொழி நாம் 8 விதங்களில் கைகளை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தார்.


Leave a Reply