டெல்லியில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஆல்கா லம்பா ஆம்ஆத்மி கட்சி தொண்டரை கன்னத்தில் அறைய முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.
கடந்தமுறை ஆம் ஆத்மி கட்சிக்காக சாந்தினி தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட ஆல்கா லம்பா கெஜ்ரிவாலுடன் மோதல் ஏற்பட்டு கடந்த அக்டோபரில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் டெல்லியில் வாக்குச்சாவடியின் முன்பு ஆல்கா லம்பாவிற்கும், ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தன்னைப் பார்த்துக் கூச்சலிட்டு நபரை ஆல்கா லம்பா கன்னத்தில் அறைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த நபரை அழைத்து செல்ல முயன்றபோது ஆல்கா லம்பா உள்ளிட்டோர் விடாமல் துரத்தி சென்று வசைபாடினர். மீண்டும் ஒருமுறை அந்த நபரை கன்னத்தில் அறைய ஆல்கா லம்பா முயன்றார்.