பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திடீர் மாற்றம்

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலத் துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் புதிய பள்ளிக் கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அந்த பதவியில் இதுவரை இருந்த பிரதீப் யாதவ் கைத்தறி மற்றும் காதிதுறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல போக்குவரத்து துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் புதிய போக்குவரத்து துறை செயலாளராக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply