இறுதி கட்டத்தை எட்டிய மேம்பால பணிகள்

சேலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ,5 ரோட்டை மையமாகக்கொண்டு மேம்பாலப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது,இந்த மேம்பாலம் 440 கோடி ரூபாய் செலவில் ஈரடுக்கு மேம்பாலமாக கட்டப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

 

நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 95 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்னும் 10 நாட்களில் முழுமையாக பணிநிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து மேம்பால பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த நெடுஞ்சாலைத்துறையினர்,இன்னும் 10 நாட்களில் மேம்பால பணி நிறைவு பெறும் என்றும்,இம்மாத இறுதிக்குள் மேம்பாலம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடம் தேதி கேட்ட பின்பே திறப்பு விழா பற்றி தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Leave a Reply