ரஜினிகாந்துக்கு அரசியல் புரியவில்லை: நடிகர் உதயநிதி ஸ்டாலின்
திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து பெற்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகிறார். அதன்படி இன்று சென்னை நந்தனத்தில் உள்ள அரசு ஆடவர் கலைக் கல்லூரி வாயிலில் மாணவர்களிடம் கையெழுத்து பெற்றார்.
அதேபோல லயோலா கல்லூரி மாணவர்களிடம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று ரஜினிகாந்த் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகராக இருப்பதால் ரஜினிகாந்திற்கு அரசியல் புரியவில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




