--- --:--:-- --

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் அரசியல்

7

டெல்லியில் வரும் எட்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கற்கட்ராமா என்ற இடத்தில் நடந்த பாஜக பிரச்சாரா பொது கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஜாமியா ஷாக் இன் பார்க், சீலம்பூர் உள்ளிட்ட இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தற்செயலாக நடந்தவையா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

 

நாட்டில் நல்லிணக்கத்தை அழிக்கும் பொருட்டு ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸால் திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டங்கள் என்று அவர் குற்றம் சாட்டினார். பாஜகவுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கு இந்த அராஜகங்களை தடுக்கும் அதிகாரங்கள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

டெல்லி மக்களின் வாக்கு தான் நாட்டில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது என்றும், தற்போது டெல்லி மக்கள் அளிக்கப் போகும் வாக்குதான் தேசத்தின் தலைவிதியை தீர்மானித்து டெல்லியை நவீனமாக்க போகிறது என்றும் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

 

நடுத்தர குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர் பணத்தை சேமிக்கும் வகையில் வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். வரி சேமிப்புக்காக எந்த திட்டத்திலும் முதலீடு செய்ய வேண்டிய அழுத்தம் புதிய முறையில் இல்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon