சேவூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளை குதிரைகள் நடனத்துடன் பக்தர்கள் தீர்த்தகுடத் திருவீதி உலா

சேவூர் அருகே அ.குரும்பபாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருகிற வெள்ளக்கிழமை நடைபெறுவதையொட்டி, பக்தர்கள் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.

 

சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ கன்னிமார் சுவாமி கும்பபிஷேக விழா நேற்று காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து அவிநாசி சேவூர் சாலை வழியாக கோயிலை வந்தடைந்தனர்.

 

இதையடுத்து மாலை 4.00 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (4 ஆம் தேதி) மாலை 6.00 மணிக்கு விநாயகர் பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசமும், மாலை 6.00 மணிக்கு முதல் கால யாக வேள்வியும், 5 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு விநாயகர் பூஜை, கோ பூஜையும், காலை 9.00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வியும், காலை 10 மணிக்கு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ கன்னிமார் சுவாமிகள் பிரதிஷ்டையும், மாலை 6.00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது.

6 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வியும், மாலை 6.00 மணிக்கு ஐந்தாம் கால யாக வேள்வியும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 7 – ம் தேதி காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக் கோவில் ஸ்ரீ பட்டத்தரசியம்மன். ஸ்ரீ கன்னிமார் சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து 9.00 மணிக்கு மேல் மஹா அபிஷேகம், அலங்கார பூஜை, தசதானம், தச தரிசனம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

 

கும்பா பிஷேகத்தை வரன்பாளையம் திருநாவுக்கரசர் திருமடம் தவத்திரு மௌன சிவாச்சல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியார் குருக்கள் நடத்தி வைக்கிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டி மற்றும் அ.குரும்பபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டு வருகிறது


Leave a Reply