ஊகானில் மீட்கப்பட்டவர்கள் டெல்லி முகாமில் உற்சாக நடனம்
டெல்லி அருகே கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் உற்சாகத்துடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள சீனாவின் உகான் நகரில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 647 பேர் விமானம் மூலம் தாயகம் மீட்டு வரப்பட்டு மருத்துவ முகாம்களில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் டெல்லி அருகே உள்ள மானேசர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் சிலர் முகமூடிகளை அணிந்தவாறு ஹிந்தி பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது.
வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட போதும் தங்களை உற்சாகம் குறையாமல் வைத்துக் கொள்ளும் இவர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




