கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நாயை மீட்ட பெண்

கர்நாடக மாநிலம் மங்களூரில் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நாயை உயிரை பணயம் வைத்து பெண் ஒருவர் மீட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மங்களூரில் பல அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

 

அதனை கண்ட பெண் ஒருவர் தனது உடலில் கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் பிறரின் உதவியோடு இறங்கி, பிறகு வீசப்பட்ட இன்னொரு கையிறை நாய் மீது கட்டினார். இதையடுத்து முதலில் நாயும் பிறகு அந்த பெண்ணும் கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டனர்.

 

அந்தப்பெண்ணின் பெயரோ, அடையாளமோ தெரியவில்லை. எனினும் அந்த வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் அந்தப் பெண்ணை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Leave a Reply