குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மலைப்பாம்புகள்..!

மும்பை அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த 3 மலைப்பாம்புகளை பிடித்த மீட்புக்குழுவினர் அவற்றை பைகளில் அடைத்து கொண்டு சென்றனர்.

 

மும்பை பாந்திரா நகர் அடுத்துள்ள காலா நகர்ப்பகுதியில் மலைப்பாம்பு புகுந்ததாக 12.30 மணியளவில் அழைப்பு வந்ததை அடுத்து அங்கு விரைந்த மீட்பு குழுவினர் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்தனர்.

 

அடுத்த ஒரு மணி நேரத்திலேயே வேறொரு இடத்தில் இருந்து வந்த அழைப்பை அடுத்து அங்கு சென்று தேடி பார்த்ததில் சுமார் 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டது. இரண்டு பாம்புகளையும் கொண்டு வரும் வழியில் வந்த மற்றொரு அழைப்பைத் தொடர்ந்து மூன்றாவதாக சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர்.

 

.இப்படிப்பட்ட பாம்புகள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பைகளில் அடைத்து கொண்டு செல்லப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.


Leave a Reply