தற்கொலை செய்து கொள்ளப் போவதாக விவசாயிகள் குமுறல்!!

விவசாய நிலங்கள் வழியே பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு படையலிட்டு பூஜைகள் செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

திருப்பூர் மாவட்டத்தில் அழகுமலை , சிவன்மலை மற்றும் காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் விவசாய நிலங்கள் வழியே குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்த போது இந்த குழாய்களை விவசாய நிலங்கள் வழியாக அல்லாமல் சாலையோரங்களில் கொண்டு செல்ல உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனால் தற்போதைய அரசு அதனை கண்டுகொள்ளாமல் விவசாய நிலங்கள் வழியே கொண்டு செல்ல அனுமதி அளித்ததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் , அம்மாவின் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு உள்ள தற்போதைய ஆட்சியாளர்கள் அம்மா அவர்களின் கொள்கை முடிவை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து, படையலிட்டு பூஜைகள் செய்து பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

இவ்விஷயத்தில் தமிழக அரசு விவசாய நிலங்கள் வழியாக அல்லாமல் நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு செல்ல வலியுறுத்தாத பட்சத்தில் அரளி காய் மற்றும் தென்னை மாத்திரை ஆகியவற்றை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்தனர்.


Leave a Reply