மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம் என முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் எம்பியுமான அனந்தகுமார் ஹெக்டே பேசியது சர்ச்சை ஆகியுள்ளது. கர்நாடகாவில் உத்தர கன்னடா தொகுதி எம்பியான அனந்தகுமார் ஹெக்டே கடந்த ஒன்றாம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.
அப்போது அவர் ஒட்டுமொத்த சுதந்திர போராட்டமும் ஆங்கிலேயர்களின் ஆதரவு மற்றும் ஒப்புதல் உடனே நடைபெற்றது என்றார். மேலும் அது நேர்மையான போராட்டமே இல்லை என்றும் சுதந்திரம் பெற ஒரு ஒப்புதலுக்கான போராட்டம் மட்டுமே இது என்ற அவர் காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம், சத்தியாகிரகம் போன்றவை ஒரு நாடகம்தான் என்று பேசினார்.
விரக்தியாலேயே ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்தனர் என்றும், வரலாற்றை படிக்கும் போது தன்னுடைய ரத்தம் கொதிப்பதாக அனந்தகுமார் ஹெக்டே பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.