ஷெரினுடன் என்ன பழக்கம்? சனம் என்னை உடல் ரீதியாக துன்புறுத்தினார்!

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான நடிகர் தர்ஷன் தன்னை தீவிரமாக காதலித்து நிச்சயதார்த்தம் செய்த நிலையில், திருமணத்திற்கு மறுத்து நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி செய்துவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி புகார் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன், தான் சனம் ஷெட்டியை காதலித்தும் நிச்சயதார்த்தம் செய்ததும் உண்மைதான் எனவும், அதனை மறைக்க சொன்னது சனம் ஷெட்டி தான் என்றும் குற்றம்சாட்டினார்.

 

மேலும் சக பெண் போட்டியாளர்களிடம் பேசக்கூடாது என்றும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் இல்லையெனில் தற்கொலை செய்வதாக சனம் மிரட்டல் விடுத்ததாக கூறிய தர்ஷன் தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் துன்புறுத்தியதாக கூறினார்.

 

தயாரிப்பாளர்களிடம் தன்னைப்பற்றி தவறாக தெரிவித்து வாய்ப்புகள் பறிபோனதால் சனம் ஷெட்டியை விட்டு விலகியதாக தர்ஷன் குற்றம்சாட்டினார்.

தனக்கு பல பெண்களுடன் தொடர்பு என்றும் 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக கூறிய புகாரை மறுத்த தர்ஷன் ஷெரின் நடிகைகயுடன் மட்டுமே நட்புடன் பழகியதாக ஒப்புக்கொண்டுவிட்ட தர்ஷன் நிச்சயதார்த்தத்திற்கு மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய் தவிர வேறு எந்த படமும் அவருக்கு கொடுக்க வேண்டியதில்லை என்றும் கூறினார்.

 

தனக்கு படவாய்ப்புகள் சிபாரிசு செய்த சனம் ஷெட்டிக்கு நன்றிக்கடனாக அவர் மீது புகார் அளிக்க விரும்பவில்லை என்றும் தர்ஷன் தெரிவித்தார்.


Leave a Reply