கட்டுபாட்டை இழந்து கோவில் மீதும் பயணியர் நிழற்கூடம் மீதும் மோதிய தனியார் மினி பஸ்

ராமநாதபுரம் நகரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு அரசு,தனியார் தொலைதூர பேருந்துகள், டவுன் பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. இந்நிலையில் இன்று காலையில் இந்நிறுத்தத்தில் மினி பஸ்ஸை ஓட்டுநர் நிறுத்த பிரேக் பிடித்த அடித்தபோது கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் உள்ள சுவாமி பீடம், நிழற்கூடையை சேதப்படுத்தியது.

இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் டவுன் போலீசார் மினி பஸ்ஸை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். ஓட்டுநர் உரிமம், தகுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply