சேலம்- திண்டுக்கல் ரயில்வே பாதை நாளை ஆய்வு செய்யப்படுகிறது

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களாகிய சென்னை, சேலம், திருச்சி ,மதுரை ,திருவனந்தபுரம் பாலக்காடு இடங்களில் வருடாந்திர ஆய்வு நடைபெற உள்ளது.இந்த ஆய்வை தெற்கு பொது மேலாளர் தான் தாமஸ் தொடங்கியுள்ளார்.

 

இதையடுத்து நாளை இந்த ஆய்வு சேலத்திலும் நடைபெற உள்ளது.நாளை காலை சரியாக பத்து மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் அதிகாரிகள் குழு கரூர்- நாமக்கல்-சேலம் வழியாக இருக்கும் அனைத்து ரயில்வே ஸ்டேஷன் களிலும் ஆய்வு நடத்த உள்ளனர்.நாளை மாலை 6 மணி அளவில் சேலத்தில் இந்த ஆய்வு பணியை நிறைவடைய உள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதி,அடிப்படை கட்டமைப்பு வசதி, ஆகிய அனைத்து தேவைகளுக்கும் நாளை ஆய்வு நடைபெற உள்ளது.


Leave a Reply