திருப்பூர் அடுத்துள்ள அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 71 வது குடியரசு தினவிழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியை மெஹருண்நீசா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழ் ஆசிரியர் கமரன் ( kamaran ) வரவேற்றார்.
உதவி தலைமையாசிரியை திலகவதி குடியரசு தினம் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து 7,8 வகுப்பு மாணவிகளின் தேசபக்தி பாடல்களுக்கான நடனமும், 9 வகுப்பு மாணவிகளின் வரவேற்பு நடனம் மற்றும் கும்மியாட்டம் நிகழ்ச்சியும் நடந்தது. கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
பின்னர் கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதைஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவிகள், விடுமுறை எடுக்காமல் 100 சதவீத வருகை தந்த மாணவிகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கவுரி மீனா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் லீலாவதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஜெயலட்சுமி விழாவினை தொகுத்து வழங்கி முடிவில் நன்றி கூறினார். தொடர்ந்து மாணவிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.