தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளை !!!

கோவையில் தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மசக்காளிபாளையம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆதாம் ஷா.தொழிலதிபரான இவர் நேற்றய தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு மூன்று பீரோக்களில் இருந்த 10 லட்சம் ரூபாய் மற்றும் 100 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.ஊரிலிருந்து திரும்பி வந்த ஆதாம் ஷா குடும்பத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டிருப்பதையும்,அதில் இருந்த 100 சவரன் நகைகள் மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிப்பட்டுருப்பதையும் கண்டு பதறியுள்ளனர். இதனையடுத்து ஆதாம் ஷா இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

விரைந்து வந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கோவையில் தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து 100பவுன் நகை மற்றும் 10 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply